செவ்வாய், 5 ஜூலை, 2016

எதிர்பாரா பண வரவிற்கு எளிய பரிகாரம்

எதிர்பாரா பண வரவிற்கு எளிய பரிகாரம்


இந்த பரிகாரம் செய்ய ஏற்ற நாள் வெள்ளிகிழமை-காலை 6-7 மணி அல்லது மதியம் 1-2 மணி. முடியாதவர்கள் மட்டும் இரவு 8-9 மணியளவில் செய்யலாம்.
ஒரு கைக்குட்டை அளவுள்ள வெள்ளை துணியை சுத்தமான பன்னீரில் நனைத்து காயவைத்து கொள்ளவும். பின்பு அதில் புதிதாக வாங்கிய கையளவு கல் உப்பு, மற்றும் 6 மொச்சை, 6 டைமண்டு கற்கண்டு சேர்க்கவும். பின்பு துணியின் நான்கு மூலைகளிலும் சிறிது குங்குமப்பூ தேய்த்து முடிச்சாக கட்டி வீட்டின் அல்லது அலுவலகத்தின் வட கிழக்கு மூலையில் யார் கண்ணும் படாதவாறு வைத்து விடவும். மறு வாரம் அவற்றை எடுத்து வில்வ மரம் அடியில் பிரித்து போட்டு விட்டு , அதே துணியை எடுத்து வந்து மீண்டும் செய்து வரலாம். அவரவருக்கு தேவையான வாரங்கள் செய்து பயனடையுங்கள். கை மேல் பலன் தரும் எளிய பரிகாரம் இது.

ராசி லக்னம் பொது பரிகாரங்கள்


துலாம் ராசி / லக்னதிற்க்கு வாழ் நாள் பரிகாரங்கள் (பொது)

ஆண்கள் :

தினமும் ஈசனை வழிபட்டு வரவும்

வீட்டில் கனகதாரா ஸ்தோத்திரம் ஒலிக்க செய்து கேட்டு வரவும்

பெண்கள் :

ஆலயத்திற்க்கு தூங்க விளக்கு அல்லது பெரிய மணி தானம் செய்யவும். வசதி உள்ளவர்கள் வருடம் ஒரு முறை செய்யலாம்.

வளர்பிறை ஞாயிறு அன்று  அம்மன் கோவிலில் நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்னை சேர்த்து  தீபம் ஏற்றி வரவும்.

செவ்வாய் கிழமை ராகு காலத்தில் துர்கையை வழிபட்டு வெங்காயம்,பூண்டு சேர்க்காத கொத்து கடலை சுண்டல் நிவேதனம் செய்து அதை விநியோகிக்கவும். முடிந்த போதெல்லம்  செய்யலாம். 

-----------------------------------------------------------------------------------------------
கன்னி ராசி / லக்னதிற்க்கு வாழ் நாள் பரிகாரங்கள் (பொது)


ஆண்கள் : 

சனிக்கிழமைகளில் தவறாது அனுமனையும் சனி பகவனையும் வணங்கி வரவு.இரவு 8-9 மணியளவில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு.

2 வருடங்களுக்கு ஒரு முறை கீழ்க்கண்ட கோவில்களுக்கு சென்று முறைப்படி வழிபடவும் :

(1) கும்பகோணம் அருகில் உள்ள திருக்கோடிக்கா சென்று கர்ப்ப கிரக விளக்கில் நெய் சேர்த்து ஈசனையும்,அம்பிக்கையையும் வழிபடவும்.
(2) விழுப்புரம் அருகில் உள்ள 'திருவாமுத்தூர்' சென்று கர்ப்ப கிரக விளக்கில் நெய் சேர்த்து ஈசனையும்,அம்பிக்கையையும் வழிபடவும். இதற்கு அருகில் உள்ள தும்பூர் நாக அம்மனையும் வழிபடவும்.

பெண்கள் :

வளர்பிறை ஞாயிற்று கிழமைகளில் விநாயகர் சன்னதியில் கர்ப்ப கிரக விளக்கில் சுத்தமான நெய் சேர்த்து, வெண் பொங்கல் தானம் செய்யவும். முடிந்தபோதெல்லாம் செய்யலாம். 

வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டு  சன்னதியில் கர்ப்ப கிரக விளக்கில் சுத்தமான நெய் சேர்த்து, வெண் பொங்கல் தானம் செய்யவும். முடிந்தபோதெல்லாம் செய்யலாம். 

வளர்பிறை மற்றும் தேய்பிறை சஷ்டி அன்று விரதம் இருந்து மாலையில் முருகரை வழிபட்டு வரவும் 

---------------------------------------------------------------------------------



சிம்ம ராசி / லக்னத்திற்கு வாழ் நாள் பரிகாரங்கள் (பொது)

ஆண்கள் :

மஹான்கள், சித்தர், குரு ஜீவ சமாதி தரிசனம் வாழ் நாள் முழுதும் அவசியம். முடிந்த போதெல்லாம் சென்று தரிசித்து வரலாம்.

தினம் ஆதித்ய ஹ்ருதயம் காலை சூரியன் எழுவதை பார்த்த வாரே கூறி வரவும். பின்பு 3 முறை சூரியனுக்கு நீர் வார்க்கவும். 

ஸ்ரீரங்கம் உடையவர் ஸ்ரீ ராமானுஜர் சன்னதி சென்று தரிசித்து வரவும். 

பெண்கள் :

முடிந்த போதெல்லாம் முருகருக்கு பால் அபிஷேகம் செய்து வரவும்.

தினசரி காலை மாலை "கருட பத்து " படித்து வரவும்-முடியாதவர்கள் ஒலி நாடாவில் கேட்டு வரலாம். 

சுதர்சன சக்கரம் வைத்து பூஜித்து வரவும்.

பவுர்ணமி தோறும் அம்மனுக்கு பால் பாயசம் நிவேதனம் செய்து அதை அனைவருக்கும் வழங்கி வரவும். 
---------------------------------------------------------------------------------------------

கடக ராசி / லக்னத்திற்க்கு வாழ் நாள் பரிகாரங்கள் (பொது) 

ஆண்கள் :

திங்கள் தோறும் பார்வதியை தரிசித்து வாருங்கள். முடிந்த போது திருகடையூர் அபிராமி தரிசனம் செய்வது நன்மை தரும். 

வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் செவ்வரளி பூ சாற்றி நெய் தீபம் ஏற்றி துர்கையை வழிபடவும்.

கீழ்க்கண்ட சரபேஸ்வரர் காயத்ரி மந்திரத்தை உட்சரித்து வரவும் : 

ஷாலுவேஷாய வித்மஹே : பக்‌ஷி ராஜய தீமஹி 
தந்நோ ஸரப : ப்ரசோதயாத் 

பெண்கள் : 

விநாயகரை ஞாயிறு அன்றெல்லாம் நெய் விளக்கேற்றி கோவிலில் சென்று வழிபாட்டு வரவும். 

லலிதா சஹஸ்ரநாமம் செவ்வாய் அன்று வீட்டில் சிகப்பு வஸ்திரம் தரித்து கூறி வரவும். முடியாதவர்கள் சிகப்பு வஸ்திரம் தரித்து கண் மூடி 3 முறை லலிதா சஹஸ்ரநாமம் ஒலி நாடாவில் கேட்டு வரலாம்.

வியாழகிழமைகளில் இரவு 8-9 மணியளவில் விஷ்ணு சகஸ்ரநாமம் கூறி வரவும் 

--------------------------------------------------------------------------------------------

மிதுன ராசி / லக்னதிற்க்கு வாழ் நாள் முழுவதற்குமான பரிகாரங்கள் (பொது)


ஆண்கள் :

பவுர்ணமி தோறும் வீட்டில் சத்திய நாராயணர் பூஜை செய்து வரவும்

புதன்கிழமைகளில் 'திருவிடைமருதூர்' மூகாம்பிகையை வணங்கி வரவும்.வீட்டிலேயே படம் வைத்து நெய் தீபம் ஏற்றி வணங்கலாம். 

சுதர்சன யந்திரம் வைத்து தினசரி சுதர்சன மந்திரம் அல்லது சுதர்சன காயத்ரி கூறி வரவும்

கும்பகோணம் அருகிலுள்ள கதிராமங்கலம்-வன துர்கை மற்றும் திருமீயச்சூர் லலிதாம்பிகை வழிபாடு வருடத்திற்கு ஒரு முறை அவசியம். 

பெண்கள் :

விநாயகருக்கு செவ்வாய் கிழமையில் காலை 9-10:30க்குள்  எண்னை காப்பு செய்ய பணம் அல்லது நல்லெண்ணெய் கொடுத்து, எண்னை காப்பு முடிந்ததும் 7 முறை பிரதட்சிணம் செய்து பின்பு விநாயகர் பின்புறம் 7 அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடவும். முடிந்த போதெல்லாம் செய்யலாம்.  

முருகர் சன்னதி சென்று அடிக்கடி வழிபட்டு வரவும். வெள்ளியில் வேல் ஒன்று வாங்கி வைத்து தினமும் கந்தர் சஷ்டி கவசம் படித்து வரலாம்.முடியாதவர்கள் ஒலி நாடாவில் தினசரி 3 முறை கேட்டு வரலாம்.

---------------------------------------------------------------------------------------------

ரிஷப ராசி / லக்னத்திற்கு வாழ் நாள் முழுதுவதற்குமான பரிகாரம் (பொது)



ஆண்கள் :

(1) ஏதேனும் மகான் /சித்தர் ஜீவ சமாதி வழிபாடு அவசியம்
(2) ஸ்ரீ ரங்க நாதரின் வெள்ளிக்கிழமை விஷ்வரூப தரிசனம் வருடம் இரு முறை செய்யலாம்
(3) நாக பஞ்சமி அன்று அஷ்ட லிங்க வழிபாடு
(4) அமாவாசையில் வைரவன்பட்டி பைரவரை வழிபாடு செய்து வரவும்
(5) காளஹஸ்தியில் வருடம் ஒரு முறை ருத்ராபிஷேகம் செய்யவும்

பெண்கள் :

(1) வெள்ளிக்கிழமை காலை 6-7 அல்லது இரவு 8-9 மணிக்கு தாயாருக்கு (மஹாலக்ஷ்மி) நெய் தீபம் ஏற்றி வரவும்
(2) செவ்வாய் கிழமை 4-4.30 க்குள் எலுமிச்சை மாலை அணிவித்து துர்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்
(3) முடிந்த போதெல்லாம் வீட்டில் 'லலிதா சஹாஸ்ரநாமாம்" கூறி வரவும். முடியாதவர்கள் தினசரி ஒலி நாடாவில் கேட்டு வரலாம்.  









கடக ராசி

கடக ராசி / லக்னத்திற்க்கு வாழ் நாள் பரிகாரங்கள் (பொது) 

ஆண்கள் :

திங்கள் தோறும் பார்வதியை தரிசித்து வாருங்கள். முடிந்த போது திருகடையூர் அபிராமி தரிசனம் செய்வது நன்மை தரும். 

வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் செவ்வரளி பூ சாற்றி நெய் தீபம் ஏற்றி துர்கையை வழிபடவும்.

கீழ்க்கண்ட சரபேஸ்வரர் காயத்ரி மந்திரத்தை உட்சரித்து வரவும் : 

ஷாலுவேஷாய வித்மஹே : பக்‌ஷி ராஜய தீமஹி 
தந்நோ ஸரப : ப்ரசோதயாத் 

பெண்கள் : 

விநாயகரை ஞாயிறு அன்றெல்லாம் நெய் விளக்கேற்றி கோவிலில் சென்று வழிபாட்டு வரவும். 

லலிதா சஹஸ்ரநாமம் செவ்வாய் அன்று வீட்டில் சிகப்பு வஸ்திரம் தரித்து கூறி வரவும். முடியாதவர்கள் சிகப்பு வஸ்திரம் தரித்து கண் மூடி 3 முறை லலிதா சஹஸ்ரநாமம் ஒலி நாடாவில் கேட்டு வரலாம்.

வியாழகிழமைகளில் இரவு 8-9 மணியளவில் விஷ்ணு சகஸ்ரநாமம் கூறி வரவும் 

                           வாழ்க வளமுடன். 

வற்றாத வளமைக்கு-செல்வ செழிப்பிற்கு வசிய வார்த்தை முறை

வற்றாத வளமைக்கு-செல்வ செழிப்பிற்கு வசிய வார்த்தை முறை


நாம் ஏற்கனவே கொடுத்த வசிய வார்த்தை முறையான 'ஏகம் அநேகம் அனுதினம் வந்தேறும்' பலரால் இன்றும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டும் அதனால் நன்மைகள் பெற்றும் வருவது பலர் சொல்ல கேட்டு வருகிறோம்-அன்றாடம்.
தற்போது அதன் அடுத்த முறையான ஒன்றை கொடுக்க உள்ளோம். முதல் முறையை செய்பவர்கள் அதை தொடர்ந்து இதையும் செய்யலாம். அல்லாதவர்கள் இதை மட்டும் தொடர்ந்து செய்து வரலாம்.
காலை குளித்து முடித்ததும் இறை வழிபாட்டின் போது இதை தொடர்ந்து 15 முறை செய்து விட்டு தங்களின் அன்றாட வேலைகளை தொடர தொட்ட அனைத்து காரியங்களும் பலிதமாவது உறுதி. வசிய வார்த்தை கொடுக்கப்பட்டுள்ளது. அதை கூறுகையில் அந்தந்த மந்திரத்திற்கு உரிய இடத்தை உங்களின் ஐந்து வலது கை நுனியும் படுமாறு வைத்து தொட்டு கொண்டே மந்திரத்தை கூறி முடிக்கவும்.
" ஏகம் சௌஜன்யம் சௌகர்யம் சௌபாக்யம் அநேகம்'
ஏகம் : உச்சந்தலை
சௌஜன்யம் : நெற்றி
சௌகர்யம் : தொண்டைகுழி
சௌபாக்யம்: நடு மார்பு குழி
அநேகம் : தொப்புள் குழி
தொடர் தோல்விகளை தடுத்து நிறுத்தும் சக்தியை கொண்டது மேற்கண்ட முறை-கிழக்கு நோக்கி நின்று செய்து வரலாம்-தேவைகள் உள்ளவரை.

                                           வாழ்க வளமுடன் 

அரசு வேலை கிடைக்க

அரசு வேலை மற்றும் வங்கி வேலை கிடைக்க எளிய பரிகாரம்



பலர் தொடர்ந்து அரசு வேலைக்காக பரிட்சைகள் எழுதியும் விண்ணப்பித்தும் தொடர் முயற்சிகள் பல காலமாக செய்து வருவதுண்டு. அப்படியும் வேலை கிடைத்த நபர்கள் மற்றும் அரசு, வங்கி வேலைகள் விரும்புவோர்  கீழ்க்கண்ட  சக்தி வாய்ந்த  பரிகாரத்தை  செய்து வருவதன் மூலம் பயனடையலாம்.


தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் ஒரு கைக்குட்டை அளவுள்ள கருப்பு துணியில் சிறிது கருப்பு உளுந்து, எட்டு எள்ளுருண்டைகள் வைத்து 8 நபர்களுக்கு மனதில் 'ஓம் சனைச்சராய நமஹ்:' என எட்டு முறை கூறிக்கொண்டே  தானம் செய்ய நினைத்த வேலை அமைய வழி         பிறக்கும்.

வீட்டில் சந்தோஷம் நிலைக்க

வீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற


ஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்தபடி அதே மந்திரத்தை வீட்டில் உள்ள அனைவரும், அல்லது விருப்பமுள்ளோர் 6 முறை கூறி வர, வீட்டில் கலகலப்பான சூழல் ஏற்படும்-அனைத்து நலன்களும் வந்து சேரும். தனிவீடுகள் உள்ளோர், மரம் அல்லது வளர்ந்த செடி இருப்பின் அதிலும் தொங்க விடலாம்.
மந்திரம் : "சுகம் சௌபாக்கியம் சௌஜன்யம் அநேகம்"

கவலைகள் மறைய, துன்பங்கள் தீர

கவலைகள் மறைய, துன்பங்கள் தீர


ஒரு சனிக்கிழமை அன்று வெள்ளை தாள் ஒன்றில் கருப்பு நிற இங்க் கொண்டு, உங்களுக்கு உள்ள உடனடி கஷ்டத்தை, குறையை எழுதவும். பின்பு கருப்பசாமியை நன்றாக மனதில் வேண்டி கொண்டு, அந்த பேப்பரை சுருட்டி அதில் கருப்பு நிற நூலால் லேசாக கட்டி வைக்கவும். பின்பு கருப்பு நிற மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றி, மனதினுள் குறைகள் அனைத்தும் அகல வேண்டும் என கருப்பசாமியை நினைத்து வேண்டுதல் வைத்து, அதை மெழுகுவர்த்தி நெருப்பில் காட்டி ஏறிய விடவும். எரிந்து முடிந்த பின் அனைத்தையும் அகற்றி விடலாம். சிறிய அளவில் உள்ள குறைகள் ஒரே வாரத்தில் நீங்குவதை அனுபவத்தில் காணலாம். பெரிய அளவில் உள்ள பிரச்சனைகளுக்கு 8 வாரங்கள் தொடர்ந்து செய்யவும். நேரம், திசை போன்றவை பார்க்க தேவை இல்லை. பலர் செய்து வெற்றி கண்ட சூட்சுமம் நிறைந்த பரிகாரம் இது.

காதலில் வெற்றி பெற

காதலில் வெற்றி பெற மற்றும் சுகமான தாம்பத்திய வாழ்க்கைக்கு


வலது கை கட்டை விரலில் வெள்ளியிலான எந்த உருவங்களும் பதிக்காத வெள்ளி மோதிரத்தை மேற்கண்ட தேவைகள் உள்ள ஆண் பெண் அணிந்து வர, நியாயமான காதலில் வெற்றி மற்றும் கணவன் மனைவி இடையே அன்னியோனியம் ஏற்படும்- சுகமான திருமண வாழ்வு தரும்

ஜோதிட பரிகாரம் அன்றாடம் பண வரவு

அன்றாடம் பண வரவு பெற



காலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படுமாறு மடக்கி வைத்து கொண்டு வாய் மூடி, மனதினுள்       "ஏராளம் தனம் தான்யம் தாராளம் தாராளம்"  என்ற மந்திரத்தை 6 முறை ஜெபித்து பின் கண்கள் மூடிய நிலையில் வாய் திறந்து நீரில் ஊதவும். பின் அந்த நீரை குடித்து விடவும்.
நாள் முழுதும் எதிர்பார்த்த, எதிர்பாராத பணவரவு, நற்செய்திகள் மற்றும் உயர்வுகள் கொடுக்கும் சக்தி வாய்ந்த முறை இது. அனுதினமும் தேவைகள் உள்ள வரை செய்து வரலாம். 

                               வாழ்க வளமுடன்.


ஜோதிட பரிகாரம் செல்லும் பணம் திரும்பி வர சூட்சும்

செல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்



நாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி.



அன்றாடம் நாம் பிறருக்கு பணத்தை கொடுக்கும் பொழுது, அதாவது செலவழிக்கும் பொழுது பெரும்பாலும் பணத்தை அப்படியே எடுத்து கொடுத்து விடுகிறோம். மாறாக, பணத்தை நன்கு கைகளால் தடவி, உணர்ந்து பின்பு "சென்று வா-திரண்டு வா" என்ற மந்திரத்தை 3 முறை மனதினுள்கூறியவாறே பணத்தை கொடுக்க, கொடுக்கும் பணம், பன் மடங்காக நம்மிடம் திரும்பும் என்பது உறுதி. முடிந்தால் பணத்தை நெற்றி பொட்டருகே மடித்து வைத்து மந்திரம் கூறியும் கொடுக்கலாம்.

       வாழ்க வளமுடன்